உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

இரு வருட ஆட்சியில் ஜனநாயகத்துக்கு எதிராக எந்தச் செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
27 பார்வைகள்

ஜனநாயகத்தை இல்லாதொழித்துவிட்டு ஒரு நாடாக எவராலும் முன்னேற்றமடைய முடியாது எனவும், தனது இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்துக்கு எதிராகத் எந்தச் செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“சட்டத்தின் ஆட்சியை முன்னிலைப்படுத்தியே எமது அரசு செயற்பட்டு வருகின்றது. ஆட்சியாளர்கள் தவறிழைக்கும்போது அதனைச் சுட்டிக்காட்டும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது.

கடந்த கால அரசுகளின் காலத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக நிறுவனங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் மற்றும் வெள்ளை வான் கலாச்சாரம் நடைமுறையில் இருந்தன.

எமது இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அனைவரும் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும்.

நானும் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படுகின்றேன். கடந்த காலங்களில் சட்டத்துக்கு அப்பாற்பட்டுச் செயற்பட்டவர்களே தற்போது சட்டத்துக்கு உட்பட மறுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

நிறைவடைந்த எமது இரண்டு ஆண்டு காலப்பகுதியில் ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழல் காரணமாகவே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. இதனால் மக்கள் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேரிட்டது.

ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்ட போதிலும், கடந்த கால அரசுகளின் ஊழல் நடவடிக்கைகள் மூலம் சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றவர்களே அதற்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றனர்.

அரசுக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் அவ்வப்போது கூட்டணிகளை அமைத்து வருகின்றனர். அவற்றை அரசுக்கு எத்தகைய சவாலாகவும் கருதவில்லை.

மேலும், வெளியக ரீதியாக ஏற்பட்ட சவால்களைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம்.

பொருளாதாரத்தின் உச்ச பயனை மக்களுக்கு வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படவோ அல்லது இரத்துச் செய்யப்படவோ உள்ளன.

மீண்டெழும் செலவுகளுக்காக 2 ஆயிரம் பில்லியன் ரூபாய் வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படுவதுடன், திறைசேரியைப் பாதுகாத்துக்கொண்டே அனைத்து அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படும்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எனது பதவிக் காலத்துக்குள் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.

மக்கள் எமது அரசின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளனர். போலியான குற்றச்சாட்டுகள் மூலம் அந்த நம்பிக்கையை எவராலும் சிதைக்க முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் : ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான தகுந்த சட்ட மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக…

5 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷக்களை இலக்காக வைத்தே செயற்படுகின்றது இந்த அரசு.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை அநுர அரசு திட்டமிட்டே சிறைப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே…

25 0 0
இலங்கை செய்திகள்

நாமல் சிறைக்குள்ளேயே ஜனாதிபதியாக இருக்கலாம் – தேவானந்த சுரவீர எம்.பி. விமர்சனம்!

தேசிய மக்கள் சக்தி அரசு மக்களால் வழங்கப்பட்ட ஆணையைப் பயன்படுத்தி நாட்டின் அழிவடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்திப் பாதையில் சீராகப் பயணித்து வருகின்றது என்று தேசிய…

25 0 0
இலங்கை செய்திகள்

கொ**லைச் சம்பவங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட நால்வர் கைது.!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறான கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முதன்மைத் துப்பாக்கிதாரி உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த…

22 0 0