உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
24 பார்வைகள்

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு மேலாக நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது இன்று திங்கட்கிழமை (21) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், நாளை (22) செவ்வாய்க்கிழமை தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வளர்ச்சியடைய அதிக வாய்ப்புள்ளதாகவும், 23 ஆம் திகதியளவில் இது வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய வங்காள விரிகுடா பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை அவ்வப்போது அதிகரிக்கக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.

அத்துடன், இடிமின்னலுடன் கூடிய பலத்த மழையின் போது காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், ஏற்கனவே அப்பகுதிகளில் தங்கியுள்ள மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பான கடற்பகுதிகளை நோக்கி நகர்த்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ராஜபக்ஷக்களை இலக்காக வைத்தே செயற்படுகின்றது இந்த அரசு.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை அநுர அரசு திட்டமிட்டே சிறைப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே…

23 0 0
இலங்கை செய்திகள்

நாமல் சிறைக்குள்ளேயே ஜனாதிபதியாக இருக்கலாம் – தேவானந்த சுரவீர எம்.பி. விமர்சனம்!

தேசிய மக்கள் சக்தி அரசு மக்களால் வழங்கப்பட்ட ஆணையைப் பயன்படுத்தி நாட்டின் அழிவடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்திப் பாதையில் சீராகப் பயணித்து வருகின்றது என்று தேசிய…

23 0 0
இலங்கை செய்திகள்

கொ**லைச் சம்பவங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட நால்வர் கைது.!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறான கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முதன்மைத் துப்பாக்கிதாரி உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த…

20 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்.!

“அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது. அரசுக்கு 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்குமாயின் இது குறித்து சர்வஜன வாக்கெடுப்பை…

19 0 0