உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

இலஞ்சம் பெற்றமைக்காகவே நாமல் ராஜபக்ஷ எம்.பி. கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
28 பார்வைகள்

இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை எவ்வாறு அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியும்.?” – இவ்வாறு வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்ஹ கேள்வி எழுப்பியுள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் வெளிநாட்டு நிறுவனத்திடம் நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றார் என்று நல்லாட்சி அரசின் காலத்தில்தான் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. எனினும், அன்றைய ஆட்சியாளர்கள் அது குறித்து எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

தற்போது அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இதனை ரணில் தரப்பினரும் சஜித் தரப்பினரும் அரசியல் பழிவாங்கல் எனக் கூறுவதில் எந்த நியாயமும் இல்லை.

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான தனது வியாக்கியானத் தீர்வை உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்தத் திருத்தம் மீதான இரு நாள் விவாதமும் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொ**லைச் சம்பவங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட நால்வர் கைது.!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறான கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முதன்மைத் துப்பாக்கிதாரி உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த…

19 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்.!

“அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது. அரசுக்கு 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்குமாயின் இது குறித்து சர்வஜன வாக்கெடுப்பை…

19 0 0
இலங்கை செய்திகள்

எந்தத் தேர்தல் வந்தாலும் மக்கள் எம் பக்கமே நிற்பர்.!

இலங்கையின் எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் எவ்வித வன்முறையிலும் ஈடுபடாத மற்றும் ஒரு சிறு கல்லைக் கூட கையில் எடுக்காத மிகவும் அமைதியான…

16 0 0
இலங்கை செய்திகள்

தற்போதைய ஆட்சியில் மக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழும் நிலை.!

தற்போதைய அரசு பொறுப்பேற்றுள்ள கடந்த இரண்டு ஆண்டுகளில், துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது டெங்குத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்…

22 0 0