பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து.!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (Southern Expressway) கலணிகம (Galanigama) மற்றும் தொடங்கொட (Dodangoda) ஆகிய பகுதிகளுக்கு இடையே வீதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும், மேலும் சில வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் கெப் (Cab) ரக வாகனம் ஒன்றும் முதலில் மோதியுள்ளன. அதனைத் தொடர்ந்து, பின்னால் வந்த மேலும் சில வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் இரண்டு பேருந்துகள், 6 கார்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
விபத்தினைத் தொடர்ந்து, காலியில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்களை தொடங்கொட வெளியேறும் வாயில் (Exit) வழியாக மாற்றி அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.




