கென்யோன் நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு.!
கென்யோன் நீர்த்தேக்கத்தின் வான்கதவு வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
அதிக அளவு நீர் வருவதால் அந்த நீரை பயன்படுத்தி நீர் மின் உற்பத்தியை பெற்று கொண்ட பின்னர் மேலதிக மின் உற்பத்தி பெற்று கொள்ள அந்த நீரை ஒரு வான்கதவை திறந்து வெளியேற்றி லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, புரோட்லேன் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு செல்ல நேற்று இரவு 10 மணிக்கு கென்யோன் நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறந்து விடப்பட்டுள்ளது என கென்யோன் நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.