உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மீதான உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம் கையளிப்பு!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
26 பார்வைகள்

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அடங்கிய இந்தத் தீர்ப்பைச் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகப் பகிரங்கப்படுத்துவார்.

இதனைத் தொடர்ந்து, 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதமானது எதிர்வரும் செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் (வியாழன், வெள்ளி) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஊழல் ஒழிப்புச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பும் உயர்நீதிமன்றத்தால் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சம்மாந்துறையிலும் கையெழுத்து வேட்டை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை – வளத்தாப்பிட்டி…

12 0 0
இலங்கை செய்திகள்

காணி கிடைக்கும் வரை எம் போராட்டம் தொடரும் : வலிகாமம் வடக்கு மக்கள் எச்சரிக்கை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்தும் “மக்களின் காணி மக்களுக்கே” என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கண்டித்தும், இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்தக் காணிகளை…

6 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த…

26 0 0
இலங்கை செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரியைச் சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச்…

9 0 0