உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
19 சனி

கரைச்சி பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
25 பார்வைகள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கரைச்சி பிரதேச செயலாளர் தவச்செல்வம் முகுந்தன், கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் கலந்து கொண்டனர்.

கௌரவ விருந்தினர்களாக எந்திரி கதிரமலைநாதன் கடம்பசீலன், துணுக்காய் வலயக் கல்விப் பணிமனை நிர்வாக உத்தியோகத்தர் செல்வராஜ் செல்வகுமார் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உள்ளூராட்சி வார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன். வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன,

பிரதேச சபைகளின் வரலாறு, அரசியல் பயணம்
​2011-ஆம் ஆண்டில், நீண்ட தசாப்தங்களுக்குப் பிறகு வடகிழக்கில் உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது. கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிட முயற்சித்த நிலையில், 2011-ல் பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளிக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு அப்பிரதேச சபைகளைக் கைப்பற்றியதுடன், மறைந்த அமரர் கோராஜா அவர்களின் தலைமையில் கரைச்சி பிரதேச சபை வழிநடத்தப்பட்டது.

2018 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் மீண்டும் பொறுப்பேற்று, பிரதேச சபைகளைச் சிறப்புற நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

​சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள்
​திடீர் குடியேற்றங்கள், பௌத்தமயமாக்கல்
வெடுக்குநாறி மலையில் புத்தர் சிலை வைக்கப்படவுள்ளது என்றும், வவுனியா மற்றும் மன்னார் எல்லைப் பகுதிகளில் (செட்டிக்குளம், கீழ் மல்வத்து ஓயா திட்டம்) சிங்களக் குடியேற்றங்கள் தீவிரமடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

காணி விடுவிப்பு
யுத்தத்திற்கு பின்னரான காலத்திலும் வலிகாமம் வடக்கில் பலாலி, வசாவிலான், மயிலிட்டி, தையிட்டி போன்ற இடங்களில் மக்கள் இன்னமும் சொந்த நிலங்களில் குடியேற முடியாமல் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு
கிளிநொச்சி பகுதியில் தொடர்ச்சியாகக் கடைகள் உடைக்கப்பட்டு திருட்டுகள் நடப்பதையும், வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதையும் குறிப்பிட்டுச் சமூகப் பாதுகாப்பின்மை சுட்டிக்காட்டப்படுகிறது.

அனோஜன் விவகாரம், இன உறவுகள்
​சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பான பிரச்சினையில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் அனோஜன் என்பவரின் விடுதலையையும், அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

மொழியாக்கம் மற்றும் சமூக ஊடகப் பகிர்வுகளால் எழும் சிறு தவறுகள், தமிழ் – முஸ்லிம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறது.

உள்ளூர் தலைமைகள், மக்கள் விழிப்புணர்வு
​கரைச்சி பிரதேச சபையினால் கிளிநொச்சியில் முதன்முதலாகப் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்ட முயற்சிக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் வாக்குறுதிகளைக் கடந்து, உண்மைகளையும் நேர்மையையும் உணர்ந்து மக்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சவூதி நாட்டின் சிறையில் வாடும் இலங்கை மைந்தன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

6 0 0
இலங்கை செய்திகள்

யாழில் அடித்தே கொ@லை செய்யப்பட்ட வயோதிபப் பெண் – மகன் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்றையதினம் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த முத்துவேலு விஜயலட்சுமி (வயது…

15 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்.!

“உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது.” – என்று வடக்கு மாகாண…

22 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவு.!

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நிகழ்வொன்றின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே…

19 0 0