உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

கொட்டகலையில் பார்வைக் குறைபாடுடைய 100 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
49 பார்வைகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, இன்று 17 ம் திகதி கொட்டகலை பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குட்பட்ட பார்வைக் குறைபாடுடைய தெரிவுசெய்யப்பட்ட 100 பேருக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு, கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் இன்று 17ஆம் திகதி கொட்டகலை பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்றது.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபையினால் பல்வேறு சமூகநல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, கொட்டகலை பிரதேச சபை அதிகாரப் பகுதிக்குள் வசிக்கும், பார்வைக் குறைபாடு காரணமாக அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது.

இதன்போது, தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களது பார்வைக் குறைபாட்டுக்கு ஏற்ற வகையில் மூக்குக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், பரிசோதனையின் போது மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக அடையாளம் காணப்பட்ட சிலருக்கு மேலதிக மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான சேவைகளை நேரடியாக வழங்கும் வகையில் இந்த சமூகநல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் ராஜவீரன்,ஆளும்கட்சியின் உபதலைவி யாகுலமேரி உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரிகளுக்கு நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டிடம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருத்துவ அதிகாரிகளுக்கான நான்கு மாடிக் குடியிருப்புக்கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. டமாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு…

38 0 0
இலங்கை செய்திகள்

கெசல்கமு ஓயாவை இடைமறித்து சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழப்பட்ட பகுதி முற்றுகை!

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பிரதானமாக நீர் வழங்கும் கெசல்கமு ஓயா நோர்வூட், ஒர்ட்ரி தோட்டத்தில் உள்ள ஓயாவை மறித்து முன்னெடுக்கப்பட்டு வந்த பாரிய அளவிலான சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு…

42 0 0
இலங்கை செய்திகள்

பேருந்தில் தவறவிட்ட பெறுமதிமிக்க பொருட்களை மீட்டு ஒப்படைத்த சாரதி மற்றும் நடத்துனருக்கான கௌரவிப்பு

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இருந்து நேற்று புதன்கிழமை முல்லைத்தீவிற்கு பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் பெறுமதியான நகை மற்றும் பணத்துடன் தவறவிட்ட…

27 0 0
இலங்கை செய்திகள்

மலைநாட்டில் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் : நடவடிக்கை எடுக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி வலியுறுத்தல்

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைப்புலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது குறித்து மலையக…

47 0 0