உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

அதானியை பின்தள்ளி முதலிடத்தைப் பிடித்த டிக்டொக் நிறுவுனர்

உலக செய்திகள் 8 மணி நேரம் முன்
66 பார்வைகள்

டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் (ByteDance) நிறுவுனர் ஸாங் யிமிங் இந்திய செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதன்மை செல்வந்தராக உருவெடுத்துள்ளார்.

ஸாங் யிமிங்கின் சொத்து மதிப்பு 105 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதைத் தொடர்ந்து அவர் இந்த முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மார்ச் 2019 இல் ப்ளூம்பெர்க் இவரது சொத்துக்களைக் கணக்கிடத் தொடங்கிய போது 13 பில்லியன் டொலர்களாக இருந்த இவரது சொத்து மதிப்பு, தற்போது 8 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் டிக்டொக் செயலி தீவிர சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்ட போதிலும், ஸாங் யிமிங் செயற்கை நுண்ணறிவுத் துறையிலான தனது முதலீடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிக்டொக்கின் அமெரிக்க செயல்பாடுகளின் சில பகுதிகளை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பைட்டான்ஸ் மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, அந்தச் செயலியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையும் தணிந்தது.

முன்னதாகச் சீனாவில் முதன்மை செல்வந்தராக திகழ்ந்த ஸாங் யிமிங், தற்போது ஆசியாவின் முன்னணி செல்வந்தராக மாறியுள்ளதுடன், ஆசிய செல்வந்தர்களின் சொத்து மதிப்பிலும் தரவரிசையிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பத் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை இந்த மாற்றம் வெளிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கட்டார் கண்டனம்!

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மக்காவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சிக்குக் கட்டார் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. புனிதத்…

47 0 0
உலக செய்திகள்

சவூதி அரேபியாவின் F-15 போர் வானூர்தியை சுட்டு வீழ்த்தியதாக ஹவூதி அமைப்பினர் அறிவிப்பு!

யேமனின் மஃரிப் பகுதிக்கு மேல் சவூதி அரேபியாவின் F-15 போர் வானூர்தி ஒன்றை, தரைவழி-வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹூதி அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். இந்த…

42 0 0
உலக செய்திகள்

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசிக்கு 25 வருட சிறைத் தண்டனை!

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாசி (Hashim Thaci) மீதான போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு…

53 0 0
உலக செய்திகள்

சூடானில் தங்கச் சுரங்க விபத்து : 70 ற்கும் அதிகமானோர் உயி@ரிழப்பு!

சூடானின் மேற்கு கோர்டோஃபான் (West Kordofan) மாநிலத்தில் அமைந்துள்ள தங்கச் சுரங்கம் ஒன்று சரிந்து வீழ்ந்த விபத்தில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அல்-நஹூத் (al-Nuhud) நகருக்கு…

46 0 0