உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹிஜாப் அணிந்து பொத்துவில் கலாச்சாரத்தை அனுபவித்த நியூசிலாந்து பெண்கள்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
175 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் பொத்துவில், அறுகம்பைப் பகுதியில் இயங்கி வரும் ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’ (Morita Adventures) சுற்றுலா அமைப்பினூடாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் மீன்பிடிப் பயணத்தில் இணைந்து மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொத்துவில் மீனவரான தஸ்லீமின் வழிகாட்டலில் கடலுக்குச் சென்ற குறித்த சுற்றுலாப் பயணிகள், தாமே ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்து மகிழ்ந்ததுடன், அன்றைய இரவு வேளையில் தாங்கள் பிடித்த மீன்களைக் கொண்டு சுவையான பார்பிக்யூ (BBQ) விருந்தையும் தயாரித்து உண்டு மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தஸ்லீமின் இல்லத்திற்கு விஜயம் செய்த அப் பெண்கள், இலங்கையின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய ஆடைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர். அத்துடன், நமது பாரம்பரிய உடைகளை ஆசையுடன் அணிந்து புகைப்படங்கள் எடுத்துத் தமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

அறுகம்பைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடல்சார் பொழுதுபோக்குச் சேவைகளை வழங்குவதுடன் நின்றுவிடாது, பிராந்தியத்தின் விருந்தோம்பல் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் வெளிநாட்டவர்களுக்கு அறிமுகப்படுத்தி வரும் ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’ தஸ்லீமின் இச் செயற்பாடு உள்ளூர் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

138 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை…

123 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் ‘ஐஸ்’ போ@தைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை…

148 0 0