உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு!

உலக செய்திகள் 4 மணி நேரம் முன்
40 பார்வைகள்

யேமனின் ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவதன் மூலம், ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை நேரடியாக மீறி வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாதுகாப்புச் சபையின் 2140 மற்றும் 2216 ஆகிய தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதன் மூலம் ஹூதி அமைப்பிற்கு ஆயுதங்கள், நிதி மற்றும் தொழில் நுட்ப உதவி செல்பவை தடைசெய்யப்பட வேண்டும் என அந்த நாடு கோரியுள்ளது.

மசகு எண்ணெய் தாங்கிகள் மற்றும் துறைமுகக் கட்டமைப்புகள் மீது ஹூதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய ஆற்றல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

ஹூதி அமைப்பினர் தங்கள் படை முன்னேற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், புதிதாகக் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து வெளியேறி, தாக்குதல்களை முற்றுப்புள்ளியாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மியன்மார் இராணுவத்திற்குத் தரவுகளை வழங்கிய குற்றச்சாட்டு : நோர்வே பொலிஸார் விசாரணை!

மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர், அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைபுரிந்ததாகக் கூறி, பிரபல…

37 0 0
உலக செய்திகள்

C5+ உச்சிமாநாடு சியோலில் ஆரம்பம்!

மத்திய ஆசிய நாடுகளுடனான பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், தென்கொரியா முதன்முறையாக C5+ எனப்படும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய வரலாற்றுச்…

40 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு $38 பில்லியன் செலவு!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் ஆறு மாத காலப் போருக்கு இதுவரை 38 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது என்றும், இத்தொகை மாதத்திற்கு 3 பில்லியன் டொலர் வீதம்…

34 0 0
உலக செய்திகள்

நேரலையில் உலங்கு வானூர்தி விபத்து : மூவர் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் பேருந்து விபத்து தொடர்பான செய்தியை நேரலையில் ஒளிபரப்பிக்கொண்டிருந்த NBC செய்தி நிறுவனத்தின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். லொஸ் ஏஞ்சலிஸ்…

59 0 0