உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

அதிகாலையில் பயங்கரம்; ரயிலில் மோதி இருவர் உ*யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
56 பார்வைகள்

களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று (16) காலை 4.30 மணியளவில் ரயிலில் மோதி தாயும் அவரது உறவுக்கார மகளும் உயிரிழந்துள்ளனர்.

அனுராதபுரம் நோக்கி ரயிலில் பயணிப்பதற்காக, களுத்துறை தெற்கு ரயில் நிலையத்தின் வலது பக்கமாக நடைமேடைக்கு வருவதற்காக ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோதே இவர்கள் இருவரும் ரயிலில் மோதியுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் உறவுக்கார மகள் ஆகியோர் மருதானையிலிருந்து காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் மோதியுள்ளதில், தாயும் உறவுக்கார மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இம் மூவரும் அனுராதபுரம் புனித நகரத்தில் நடைபெறவுள்ள மத நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மதுகம பகுதியிலிருந்து வந்துள்ளனர்.

உயிரிழந்த பெண்களின் சடலங்கள் தெற்கு களுத்துறை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலங்களை களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டி வைப்பு.!

மன்னார் மாவட்ட மக்களுக்கு அவசர மற்றும் தீவிர மருத்துவ சேவைகளை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் வழங்குவதற்கு தேவையான நவீன வசதிகளுடன், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து…

36 0 0
இலங்கை செய்திகள்

தீவிரமடையும் எல் நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை.!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல் நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான…

46 0 0
இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் கோலாகலமாக ஆரம்பமான உள்ளூராட்சி வார நிகழ்வுகள்.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் சம்மாந்துறை பிரதேச…

37 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அச்சுறுத்தல்; வனஜீவிகள் அலுவலகம் அமைக்க திட்டம்.!

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின்…

12 0 0