உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

22ஆவது திருத்தம் குறித்து உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தயார்.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
57 பார்வைகள்

“அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் பொது வெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு எம்மால் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது. உயர் நீதிமன்றத்தால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.” – என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அரசமைப்பின் 22ஆவது திருத்தம் மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழு திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் எம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பவர்கள் எவரானாலும் அவர்கள் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று மனுத் தாக்கல் செய்ய முடியும். அவற்றை ஆராய்ந்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.

நாட்டில் நடைமுறையிலுள்ள அரசமைப்புக்கமைய சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் போது, எந்தளவு பெரும்பான்மை வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். அந்தவகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை போதுமானதா அல்லது அதற்கும் மேல் சர்வசன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டுமா என்பதை அரசால் தீர்மானிக்க முடியாது.

உயர்நீதிமன்றத்தால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதனை ஏற்றுக்கொள்வதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். 22ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருப்பவர்களும் நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது குறித்த தீர்மானம் எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்படவுள்ளது. எனவே, பொது வெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு எம்மால் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தீவிரமடையும் எல் நினோ காலநிலை மாற்றம் தொடர்பில் எச்சரிக்கை.!

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண வெப்ப மாற்றம் காரணமாக எல் நினோ காலநிலை முறை தீவிரமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக அடுத்த சில மாதங்களில் உலகெங்கிலும் கடுமையான…

41 0 0
இலங்கை செய்திகள்

சம்மாந்துறையில் கோலாகலமாக ஆரம்பமான உள்ளூராட்சி வார நிகழ்வுகள்.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் “வளமான நாடு – அழகான வாழ்வு” திட்டத்தின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் சம்மாந்துறை பிரதேச…

32 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அச்சுறுத்தல்; வனஜீவிகள் அலுவலகம் அமைக்க திட்டம்.!

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின்…

9 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

மித்தெனிய, மகாக்கொட்டுவ பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை (15) ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 34 வயதுடைய மித்தெனிய…

44 0 0