உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

வரலாறு படைத்த ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்க நாடு திரும்பினார்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
49 பார்வைகள்

உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் (World Athletics Ultimate Championship) மற்றும் டைமண்ட் லீக் (Diamond League) ஆகிய இரண்டு பட்டங்களையும் வென்ற இலங்கையின் ஈட்டி எறிதல் சாம்பியன் ருமேஷ் தரங்க இன்று (15) அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TK-730 என்ற விமானம் மூலம் அதிகாலை 5.10 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ருமேஷ் தரங்கவை வரவேற்பதற்காக அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை தந்திருந்தனர்.

மேலும், விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அவர் பணியாற்றும் இலங்கை விமானப்படையின் உயர் அதிகாரிகளும் ருமேஷ் தரங்கவை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், 91.09 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற ருமேஷ் தரங்க சமர்த்தானார்.

அங்கு இரண்டாம் இடத்தைப் பெற்ற கிரெனடா நாட்டின் வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸை விட 4.91 மீட்டர் கூடுதல் இடைவெளியைப் பதிவு செய்து அவர் இந்த வெற்றியை உறுதிப்படுத்தினார்.

ஜெர்மனியின் ஜூலியன் வெபர் மற்றும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் போன்ற உலகின் முன்னணி வீரர்களை அவர் தோற்கடித்தமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதனிடையே, அல்டிமேட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கு முன்னர் டைமண்ட் லீக் பட்டத்தையும் ருமேஷ் தரங்க கைப்பற்றியிருந்ததால், சர்வதேச தடகள அரங்கில் இலங்கைக்கு பெரும் கௌரவம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால்…

37 0 0
இலங்கை செய்திகள்

இந்த ஆண்டில் இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

இவ்வாண்டில் இதுவரை இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை…

42 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு, ஸ்டேடியம்கம ‘Port View Residencies’ புதிய அடுக்குமாடி வீடமைப்புத் தொகுதி மக்களிடம் கையளிப்பு.!

கொழும்பு நகர்ப்புற மக்களுக்கு சிறந்த வீடமைப்பு வசதிகளை வழங்கி வைக்கும் நோக்கில், கொழும்பு 14, கிராண்ட்பாஸ், ஸ்டேடியம்கம பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “Port View Residencies” அடுக்குமாடி…

41 0 0
இலங்கை செய்திகள்

சித்தாண்டியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.!

மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்றைய தினம் சித்தாண்டியில்…

46 0 0