உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவு வழங்க நேட்டோ அமைப்பு தீர்மானம்!

உலக செய்திகள் 6 நாட்கள் முன்
39 பார்வைகள்

போலந்து எல்லைக்கு மிக அருகில் ரஷ்யா நடத்திய ஆளில்லா வானூர்தி தாக்குதல்களைத் தொடர்ந்து யுக்ரைனுக்குக் கூடுதல் ஆதரவு அளிக்கப்படும் என நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) உறுதி அளித்துள்ளார்.

யுக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் இருந்து 32 நாடுகள் அடங்கிய நேட்டோ கூட்டணி பின்வாங்காது என்றும் ரஷ்யாவுடனான தனது கிழக்கு எல்லையில் தற்காப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக யுக்ரைன்-போலந்து எல்லைக்கு அருகில் பயணித்த தொடருந்து ஒன்றின் மீது ரஷ்ய ஆளில்லா வானூர்திகள் தாக்குதல் நடத்தின.

பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் முன்னாள் சுவீடன் பிரதமர் காரல் பில்ட் ஆகியோர அடங்கிய தூதுக்குழு அந்த தொடருந்து நிலையத்தைக் கடந்து சென்ற சில நிமிடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேட்டோ எல்லைக்கு அருகில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் புடினின் பயத்தையும் மேற்கத்திய நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்த நினைக்கும் எண்ணத்தையுமே காட்டுகிறது என்று நேட்டோவின் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

இதற்கிடையில், யுக்ரைனும் ரஷ்யாவும் பரஸ்பரம் ஒருவரின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் இதை ரஷ்யாவோ அல்லது யுக்ரைனோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!

அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஈரான் தனது முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளர்…

19 0 0
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்; ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசர சட்டத்தில் அமெரிக்க…

49 0 0
உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

61 0 0
உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

46 0 0