உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

விபத்துக்குள்ளான P 4447 வேகத் தாக்குதல் படகு மீட்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
36 பார்வைகள்

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படையின் P 4447 வேகத் தாக்குதல் ரோந்துப் படகு, கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுழியோடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம், 2026 செப்டம்பர் 11 ஆம் திகதி வெற்றிகரமாக மீட்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு கப்பல்துறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

P 4447 படகினை மீட்பது குறித்த நடவடிக்கையின் இறுதி கட்டமாக இருந்ததுடன், முதல் கட்டமாக 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி P 4447 படகு விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட அப்படகின் பணியாளர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கை கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் அங்குலானை பகுதி மீனவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையானது பணியாளர்களில் பதினொரு பேரை (11) மீட்டமை மற்றும் விபத்து காரணமாக காணாமல் போயிருந்த படகின் இரண்டாவது கட்டளை அதிகாயின் சடலத்தை 2026 செப்டம்பர் 04 ஆம் திகதி மீட்டெடுத்ததுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இதற்கமைய, இறுதி கட்டமாக, கடற்படை சுழியோடல் மற்றும் மீட்புக் குழுக்களால், நிலவிய கடலின் கொந்தளிப்பான தன்மை மற்றும் நீருக்கடியில் உள்ள சூழ்நிலைகளுக்கு மத்தியில் படிப்படியாகவும் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றியும் செயல்படுத்தப்பட்ட நீண்ட மற்றும் சிக்கலான நடவடிக்கைக்குப் பின்னர், கடல் மட்டத்திற்கு கீழ் சுமார் 80 அடி ஆழத்தில் இருந்த P 4447 வேகத் தாக்குதல் படகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.

கடற்படையின் தொழில்முறைத் தன்மை, தொழில்நுட்பத் திறமை மற்றும் அனைத்துப் பொறியியல் தொழில்நுட்பப் பிரிவுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பு ஊடாகப் பெற்ற சிறந்த வெற்றியாக குறிப்பிடத்தக்க P 4447 மீட்பு நடவடிக்கையின் போது, கடற்படை கடல்சார் பொறியியல், படகு உடல் பொறியியல், மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரிவுகள் மற்றும் சுழியோடல் மற்றும் மீட்புக் குழுக்களால் தமது நிபுணத்துவ அறிவு, தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் செயற்பாட்டு அனுபவங்களைப் பயன்படுத்தி படகு கடலின் அடியிலிருந்து படிப்படியாக மேற்பரப்புக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு கப்பல்துறை தனியார் நிறுவனத்தின் தொழிநுட்ப மற்றும் நிபுணத்துவ பங்களிப்பும் சிறப்பான ஆதரவாக அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மீனவர்களின் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய “கொப்பரா” மீன்.!

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் இன்று (14) அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ் கடல் மீன் சிக்கியுள்ளது. சுமார்…

50 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு.!

கிளிநொச்சி கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் வட்டார…

42 0 0
இலங்கை செய்திகள்

பணியாற்ற அதிகாரம் அவசியம்; மாகாண சபை தேர்தலில் களமிறங்க நளின் பண்டார விருப்பம்.!

நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளபோதிலும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான பணிகளை திறம்பட செய்ய முடியாது…

57 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி பிக்கு உ*யிரிழப்பு.!

கண்டி – உடுதும்பர, கைகாவல பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் நீராடச் சென்ற 11 வயதான பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

54 0 0