உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

யாழில் குடும்பஸ்தர் கொ*லை; மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
14 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், துன்னாலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெயசீலன் ஜெனிதன் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழுவினர், ஜெனிதனை வழிமறித்து சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சந்தேகநபர்கள் மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான தொடர் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது.!

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும்…

60 0 0
இலங்கை செய்திகள்

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா.!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், 2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஏற்பாட்டில், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும்…

47 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு பேரணியும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்வும்…

46 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றின் மீது கவிழ்ந்த பாரவூர்தி.!

பதுளை – மஹியங்கனை வீதியில், மடித்தலை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வீட்டில் இருந்த தந்தை அவரது மகன் மற்றும்…

39 0 0