காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியமனம்.!
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் S.M காந்தவல நேற்று முன்தினம் புதன்கிழமை கடமையினை பொறுப்பேற்றார்.
இதற்கு முன்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய நிலையில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.