உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் அவசரமாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள்; ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
221 பார்வைகள்

நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு வழிவகுக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பயன்பாட்டில் இருந்து இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி, நிலங்கள் மற்றும் கட்டிடங்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
யுத்த காலத்தில் பாதுகாப்புத் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சில பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படாமல் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 2,030 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், இதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றம் தாமதமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் பகுதியில் சுமார் 290 ஏக்கர் காணி, பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் சுமார் 1,500 மீற்றர் நீளமான மூடப்பட்ட பகுதி, வசாவிளான் கிழக்கில் 511 பிரிகேட் முகாம் அமைந்துள்ள பகுதியில் 45 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 17 ஏக்கர் தனியார் காணி, மயிலிட்டித்துறை தெற்கில் சுமார் 130 ஏக்கர் பரப்பில் இதுவரை ஏறக்குறைய 5 ஏக்கர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளமை, மயிலிட்டித்துறை வடக்கில் சுமார் 40 ஏக்கர் காணி, பலாலி வடக்கில் இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான சுமார் 400 மீற்றர் நீளமான அணுகல் பாதை ஆகியவை தொடர்பில் அவர் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அத்துடன், மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையின் மைதானம், மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம், கிறிஸ்தவ மயானம், பிள்ளையார் ஆலயம், பொதுமக்களின் வழிபாட்டு மற்றும் சமூகப் பயன்பாட்டு இடங்கள், ஐஸ் பெக்டரி உள்ளிட்ட முக்கிய இடங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலாலி தெற்கு பகுதியில் அமைந்திருந்த தோலகட்டி பழச்சாறு தொழிற்சாலை மற்றும் அதனருகிலுள்ள சிறி வேலுப்பிள்ளை வித்தியாலயத்துக்குச் சொந்தமான காணிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

காணிகளை விடுவிப்பது என்பது வெறுமனே நிலங்களை மீளக் கையளிப்பது மாத்திரமல்ல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், பொதுப் போக்குவரத்து, வழிபாடு மற்றும் சமூக – பொருளாதார நடவடிக்கைகளை மீள இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

எனவே, ஜனாதிபதி இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

149 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

138 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

132 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

140 0 0