உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம்!

உலக செய்திகள் 3 மணி நேரம் முன்
114 பார்வைகள்

அமெரிக்காவில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கோடைக்காலம், 132 ஆண்டுகால வானிலைப் பதிவுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பமான கோடையாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration – NOAA) தகவலின்படி, நாட்டின் தொடர்ச்சியான 48 மாநிலங்களில் சராசரி வெப்பநிலை 23.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.

இது 20ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 1.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதமும் இதுவரை பதிவான மிகவும் வெப்பமான ஆகஸ்ட் மாதமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கடும் வெப்பத்துடன் அமெரிக்காவின் பல பகுதிகளில் வறட்சியும் தீவிரமடைந்துள்ளது. செப்டம்பர் 1ஆம் திகதி நிலவரப்படி, நாட்டின் சுமார் 59 சதவீதப் பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா உள்ளிட்ட பகுதிகளில் ஆகஸ்ட் மாத மழைவீழ்ச்சி வழக்கத்தைவிட 30 சதவீதத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் உலகளவில் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும், அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்திலும் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை நிலவும் என NOAA கணித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

உக்ரைன், மால்டோவா எல்லையில் ஆளில்லாத வானூர்தித் தாக்குதல் : இருவர் பலி!

உக்ரைன் மற்றும் மால்டோவா எல்லைக் கடக்கும் பகுதியில் நடத்தப்பட்ட ரஷ்ய ஆளில்லாத வானூர்தி தாக்குதலில் 02 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் உள்ள ஸ்டாரோகோசாச்சே (Starokozache)…

128 0 0
உலக செய்திகள்

கமரூனில் துப்பாக்கி முனையில் 5 ஆசிரியர்கள் கடத்தல்!

கமரூனின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையம் மீது ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஐந்து ஆசிரியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். வூம்…

116 0 0
உலக செய்திகள்

சிரியாவில் ஆயுதக் கிடங்கொன்றில் வெடிப்பு: 14 பேர் பலி!

சிரியாவின் இட்லிப் (Idlib) மாகாணத்தில் உள்ள ஆயுதக் கிடங்கொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணம்…

122 0 0
உலக செய்திகள்

பெரு நாட்டில் 600 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு!

பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் 600 ஆண்டுகளாக மனிதத் தொடுகைக்கு உட்படாத பழமையான கல்லறை ஒன்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சான் சான் (Chan Chan) நகருக்கு…

94 0 0