உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

யாழில் இடம்பெற்ற கொடூரம்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
148 பார்வைகள்

நேற்றிரவு பருத்தித்துறை – துன்னாலையில் கொடூர கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஒரே ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட குழுவினர், ஓராங்கட்டை பகுதியில் வைத்து அவர்மீது கொடூர தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டனர். இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலையை மேற்கொண்ட நால்வரும் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமானது தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிசுசெரிய பேருந்து சேவை ஆரம்பித்து வைப்பு.!

கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வு வடமாகாண வீதிப்பயணிகள்…

121 0 0
இலங்கை செய்திகள்

வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி.!

சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பு ( IMSESO) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில்…

80 0 0
இலங்கை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

152 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைதுக்கான சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை.!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் எவையும் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

128 0 0