உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

நவம்பர் தேர்தலுக்கு பிறகு ஈரானுக்கு எதிரான போர் உடன் முடிவுறும்!

உலக செய்திகள் 2 வாரங்கள் முன்
128 பார்வைகள்

ஈரானுடனான போர் எதிர்வரும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னரே முடிவுக்கு வரும் என்றும், அதுவரை மசகு எண்ணெய் விலை குறையாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் ஏழாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

புதன்கிழமை அன்று எண்ணெய் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டொலராக உயர்ந்ததை அடுத்து ஜனாதிபதி ட்ரம்ப் இந்தக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெறவுள்ள குடியரசுக் கட்சியின் இடைக்காலத் தேர்தல் மாநாட்டிற்காகப் புறப்பட்ட ட்ரம்பை செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய அவர், “ஈரானியர்களால் அதற்கு மேல் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாது என்பதால், தேர்தல் முடிந்த உடனேயே போர் முடிவுக்கு வரும், அதைத் தொடர்ந்து மசகு எண்ணெய் விலையும் சரியத் தொடங்கும்” என்றார்.

இதற்கிடையே, அமெரிக்கப் படைகள் ஈரானுடன் தொடர்புடைய ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களைத் தாக்கியுள்ளன.

பதிலுக்கு ஈரானும் ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்களை நடத்தியுள்ளதால் உலகளாவிய எரிபொருள் விலை உயர்ந்துள்ளதுடன், அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.

போர் காரணமாக எரிபொருள் முதல் அன்றாடப் பொருட்கள் வரை விலை உயர்ந்துள்ளதால் ட்ரம்ப்பின் செல்வாக்கு சரிந்து வரும் சூழலில், வரவிருக்கும் இடைக்காலத் தேர்தல்கள் அமெரிக்க அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0