உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த அருகதையும் இல்லை!

உலக செய்திகள் 2 வாரங்கள் முன்
153 பார்வைகள்

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசுவதற்கு அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எந்த அருகதையும் இல்லை என்று ஈரானின் முதல் துணை ஜனாதிபதி மொஹமட் ரெசா அரேப் (Mohammad Reza Aref ) தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) ஆளுநர்கள் குழு ஈரானுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் இரட்டை வேடத்தையே காட்டுவதாகவும், சமாதான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதில் ஈரான் உறுதியாகப் பின்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை வைத்திருப்பவர்களும், ஹிரோஷிமா தாக்குதலை நடத்தியவர்களும், அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியவர்களுமே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளனர் என மொஹமட் ரெசா அரேப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஈரானின் உள்கட்டமைப்புகளையும் நாகரிகத்தையும் அச்சுறுத்துபவர்களுக்கு நியாயம் பேசத் தகுதி கிடையாது என்று குறிப்பிட்ட அவர், ஈரானிய மக்கள் தங்கள் சட்டப்பூர்வ உரிமைகளுக்காகவும் அமைதியான அணுசக்திப் பாதையிலும் உறுதியாக நிற்பார்கள் என தெரிவித்துள்ளார்.

ஐநா அணுசக்தி ஆய்வாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஈரானை ஐநா பாதுகாப்புப் சபைக்கு அனுப்பக் கோரி அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளால் இந்தத் தீர்மானம் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் அணுசக்தி தொடர்பான ராஜதந்திர மோதல்கள் மற்றும் ஐநா தீர்மானங்கள் இந்தப் பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0