உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

பிலிப்பைன்ஸில் கப்பலில் தீ விபத்து – ஐவர் பலி – 87 பேர் மாயம்!

உலக செய்திகள் 2 வாரங்கள் முன்
143 பார்வைகள்

பிலிப்பைன்ஸில் எம்.வி. ஜூன் அஸ்டர் (MV June Aster) பயணிகள் கப்பலில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுற்றுலாத் தலமான பலவான் மாகாணத்தின் கொரான் பகுதிக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கரைக்கு அருகில் சுமார் 2.2 கிலோமீட்டர் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டின் கடலோரக் காவல்படை, குறித்த கப்பலில் 134 பேர் பயணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 42 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கப்பலில் பயணம் செய்தவர்களில் 87 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் வௌியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0