உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

டிரம்ப்பிற்கும் புட்டினிற்கும் இடையே தொலைபேசியில் உரையாடல்!

உலக செய்திகள் 2 வாரங்கள் முன்
160 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார்.

யுக்ரைனில் அமைதி ஒப்பந்தத்தை எட்டும் முயற்சிகளை வெள்ளை மாளிகை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த உரையாடல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இரண்டு தலைவர்களின் ஒரு மணி நேர உரையாடல் “ஆக்கபூர்வமாகவும் மிகவும் வெளிப்படையாகவும்” அமைந்ததாக புடினின் வெளிவிவகார ஆலோசகர் யூரி உஷாகோவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

யுக்ரைனில் நடந்து வரும் போர் மற்றும் களத்தில் ராணுவ இலக்குகளை அடைவதற்கான ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து இதன்போது புடின் பேசியதாக உஷாகோவ் குறிப்பிட்டார்.

நேட்டோ உறுப்பு நாடுகள் உட்பட ஐரோப்பா மீது ரஷ்யா எதிர்காலத்தில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தை புடின் இந்த உரையாடலின்போது நிராகரித்துள்ளார்.

ஐரோப்பாவை நோக்கி எந்தவித ஆக்கிரமிப்பு திட்டமும் தங்களிடம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்மொழிவுகள் குறித்து விவாதிக்கஇ அமெரிக்க சிறப்புத் தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்கோப் ஆகியோர் அண்மையில் புடின் மற்றும் யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியை தனித்தனியாக சந்தித்துப் பேசிய சில நாட்களுக்குப் பிறகு இந்தத் தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது.

பேச்சுவார்த்தைக்காக சண்டைகள் சுருக்கமாக நிறுத்தப்பட்டிருந்த போதிலும், இந்தச் சந்திப்புகள் எந்தவொரு பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில்இ செவ்வாய்க்கிழமை காலை கீவ் நகர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும்இ 25 பேர் காயமடைந்ததாகவும் யுக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில்இ பிரியான்ஸ்க் மற்றும் குர்ஸ்க் பிராந்தியங்களில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், கிரிமியாவில் யுக்ரைன் நடத்திய தாக்குதல்களில் சுமார் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.

2022 பெப்ரவரியில் தொடங்கிய இந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதை தனது இரண்டாவது நிர்வாகத்தின் முன்னுரிமையாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இருப்பினும்இ யுக்ரைன் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளை முழுமையாக ஈடுபடுத்தாமல் போரை முடிக்க முயல்வதாக ட்ரம்ப் நிர்வாகம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்தநிலையில் விரைவில் ட்ரம்பும் ஸெலென்ஸ்கியும் சந்திக்கவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0