உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

பொலிஸாரின் அதிரடி வேட்டை; ஹெரோயினுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
157 பார்வைகள்

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேடமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி ஆகியோரின் உத்தரவின் பேரில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தனுஷ்க ரத்நாயக்க மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரசோதகர் முதித பிரியங்கரா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச் சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 8000 மில்லிகிராம் ஹெரோயினுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திஸ்ஸபுர பாலம் கடௌரா சந்தி அருகில் 2,800 மில்லிகிராம் ஹெரோயினுடன் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலம் கண்டுவ பகுதி மின்மாற்றி அருகே ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த சமனபெட்டாவைச் சேர்ந்த நபர் 3000 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார்.

பிரிட்ஜ் கேம்ப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபர் 2,200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உஹன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உஹன சோதனையை முடித்துவிட்டு பொலிஸார் திரும்பியபோது, கரங்கவா கிராமத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வரைச் சோதனையிட்டனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து முறையே 100, 110, 90 மற்றும் 95 மில்லிகிராம் வீதம் மொத்தம் 395 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

அம்பாறை நகரைச் சேர்ந்த இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சோதனை நடவடிக்கையில் பொலிஸ் சார்ஜன்ட்களான மக்புல் (43383), சந்திரசேன (67664) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான திஸ்ஸநாயக்க (86679), சுதேஷ் (21016), சஞ்சீவ (91287), சுனில் (95062), மதனசிங்க (35793) உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

அம்பாறையில் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் நேற்று…

93 0 0
அம்பாறை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

78 0 0
அம்பாறை செய்திகள்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை தற்போதைய இடத்திலிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றி, புதிய நிரந்தரக் கட்டடமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர…

61 0 0
அம்பாறை செய்திகள்

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு!

பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் 09ஆம்…

100 0 0