உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

கார்க் தீவு அருகே ஈரான் எண்ணெய் கப்பலை குறிவைத்த அமெரிக்கா!

உலக செய்திகள் 19 மணி நேரம் முன்
77 பார்வைகள்

ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் நங்கூரமிட்டிருந்த எண்ணெய் கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இருப்பினும், இது குறித்து ஈரானிய அதிகாரிகளோ அல்லது அமெரிக்க மத்திய கட்டளையகமோ (US Central Command) இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ கருத்துக்களையும் வெளியிடவில்லை. 

கடந்த ஓகஸ்ட் 31 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது. 

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடங்கியது. 

இந்த சூழ்நிலையில், ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை மேற்கொள்ளும் கார்க் தீவு பகுதியைச் சுற்றியுள்ள எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இத்தாக்குதல் ஈரானின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் தொழில்துறைக்கு மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

13 வயதில் செய்த சாதனை – பசியால் வாடும் குடும்பங்களுக்கு 25,000 பீட்சாக்களை வழங்கிய சிறுமி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 13 வயதான இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர் தனது சகோதரருடன் இணைந்து உருவாக்கிய செயலியின் மூலம், பசியால் வாடும் குடும்பங்களுக்கு 25,000-க்கும் மேற்பட்ட…

99 0 0
உலக செய்திகள்

பீஜிங்கில் சர்வதேச ஊடக மாநாடு; 90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்பு

சீன சர்வதேச செய்தித் தொடர்பாடல் மையத்தின் (China International Press Communication Center) 2026ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித்திட்டம் சீனாவின் பீஜிங் நகரில் நேற்று (4) ஆரம்பமானது. இம்முறை…

52 0 0
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவின் புதிய உலக வரைபடம் 

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான நிலப்பரப்பை மிகவும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கான பிரேரணை ஒன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

48 0 0
உலக செய்திகள்

நைஜீரியாவில் நச்சு வாயு கசிவு – 37 பேர் பலி

நைஜீரியாவின் எண்ணெய் வளம் மிக்க ரிவர்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற நச்சு வாயு கசிவு சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். ஒக்ரிகா பகுதியில் உள்ள ஒகாரி ஜெட்டி அருகே,…

49 0 0