உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கந்தப்பளை கொன்கோடியா தோட்டத்தில் தேயிலை அழிப்பு? – உடனடி நடவடிக்கை கோரும் மக்கள்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
171 பார்வைகள்

நுவரெலியா, கந்தப்பளை பகுதியில் அமைந்துள்ள கொன்கோடியா (Concordia) தோட்டத்தில் தேயிலைச் செய்கை நிலங்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தி அழிக்கப்பட்டு, குறித்த காணிகளில் பாரியளவில் மரக்கறிச் செய்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து, அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரவுன்ஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் கொன்கோடியா தோட்டப் பகுதியில் வளமான தேயிலைச் செடிகள் ஜெகசீப் இயந்திரங்கள் மூலம் வேரோடு அகற்றப்பட்டு, வணிக நோக்கிலான மரக்கறிச் செய்கைக்காக காணிகள் பயன்படுத்தப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு கொள்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறப்படுவது கவலைக்குரியது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

கந்தப்பளை மலை உச்சிப் பகுதியில் உள்ள நீரேந்துப் பகுதிகளில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு கிடைக்கும் குடிநீர் மற்றும் விவசாய நீர் தனிநபர் ஒருவரால் திசை திருப்பப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாகவும், தங்களுக்கான நீர் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை

மலைச்சரிவுகளில் மண்ணைத் தாங்கி நிற்கும் தேயிலைச் செடிகள் மற்றும் தாவரங்கள் அகற்றப்பட்டு நிலம் இயந்திரங்கள் மூலம் புரட்டப்படுவதால் மண் அரிப்பு அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் மழைக்காலத்தில் இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு கீழ்வாரத்தில் உள்ள வீடுகள், வீதிகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தேயிலைச் செய்கை அழிக்கப்படுவதால் பொருளாதார பாதிப்பு

இலங்கையின் முக்கிய ஏற்றுமதி வருவாய் ஆதாரங்களில் ஒன்றான தேயிலைச் செய்கை நிலங்கள் வேறு பயன்பாடுகளுக்காக மாற்றப்படுவது நீண்டகாலத்தில் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேயிலை நிலங்களைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கையில் சட்ட மற்றும் ஒழுங்குமுறை ஏற்பாடுகள் உள்ளன. குறிப்பாக தேயிலை உள்ளிட்ட தோட்ட நிலங்களை துண்டாடுதல் மற்றும் ஏற்கனவே உள்ள பயிர்ச்செய்கைகள் அழிக்கப்படுவது தொடர்பில் கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாக அரசாங்கத்தின் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைத் தோட்டங்கள் (துண்டாடல் கட்டுப்பாடு) சபையும் குறிப்பிடுகிறது.

சிறு விவசாயிகள் பாதிக்கப்படலாம்

பாரிய அளவில் மரக்கறிச் செய்கை மேற்கொள்ளப்பட்டால் சந்தையில் உற்பத்தி அதிகரித்து விலைகள் வீழ்ச்சியடையக்கூடும் என்றும், இதனால் பாரம்பரியமாக சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், தோட்டக் காணிகள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட நிலையில், அவை மூன்றாம் தரப்பினரின் வேறு வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும்

கந்தப்பளை கொன்கோடியா தோட்டப் பகுதியில் இடம்பெறுவதாகக் கூறப்படும் தேயிலை அழிப்பு மற்றும் மண் அகழ்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், அப்பகுதியின் நீராதாரங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குடிநீர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA), கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கள ஆய்வை மேற்கொண்டு, சுற்றுச்சூழல் மற்றும் மண்சரிவு அபாயங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.

மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் முக்கியமான தேயிலை வளத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

138 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0