உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

நித்திரை கலக்கத்தால் விபத்து: பள்ளத்தில் பாய்ந்த கார்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
54 பார்வைகள்

யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற கார் ஒன்று, நித்திரை கலக்கத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்ததில், காரில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (02) பிற்பகல் 2.15 மணியளவில் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள், ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

விபத்தில் காரில் பயணித்த இருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கார் பலத்த சேதமடைந்துள்ளது.

ஹட்டன் வலய காவல்துறைத் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகரவின் பணிப்புரையின் பேரில் ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிலையான உணவு முறைமைகள் பற்றிய இலங்கையின் பாரம்பரிய அறிவிலிருந்து உலகிற்கு முக்கியமான ஒரு பாடம்

பூட்டானில் நடைபெற்ற உலக உச்சிமாநாட்டில், நிலையான உணவு முறைமைகள் தொடர்பான இலங்கையின் பாரம்பரிய அறிவை பிரதமர் உலகிற்கு எடுத்துரைத்தார். 2026 செப்டம்பர் 01 ஆம் திகதி பூட்டானின்…

26 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் 54 நீர்ப்பாசனக் குளங்களில் 43 குளங்களின் நீர்மட்டம் குறைவு!

வடமாகாணத்தில் உள்ள 54 பாரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களில் பெரும்பாலானவற்றின் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதாக வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தம்பிராஜா இராஜகோபு தெரிவித்துள்ளார்.…

38 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல்…

81 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானை–புகையிரத மோதலைத் தடுக்க புதிய தொழில்நுட்பத் திட்டம்!

காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை…

64 0 0