உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
74 பார்வைகள்

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக அமல்படுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி, காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சுகயீன விடுமுறை போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக அமுல்படுத்துதல், உரிமைகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலை, பதவி உயர்வு, சம்பள நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

குறித்த போராட்டத்தில் மாவட்ட அரச திணைக்களங்களில் கடமையாற்றுகின்ற பல நூற்றுக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தை தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து ஜனாதிபதிக்கு கையளிக்க வேண்டிய மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அரச திணைக்களங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

43 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

65 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

28 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

42 0 0