உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஈரான் மீது அமெரிக்காவின் மிக நுணுக்கமான உளவியல் தாக்குதல்!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
46 பார்வைகள்

ஈரானின் நிதிப் பின்னணியை முற்றிலும் முடக்கும் வகையில் அமெரிக்கா அதன் வரலாற்றிலேயே மிகக் கடுமையான “Economic D-Day” பொருளாதாரத் தடைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்க கருவூலத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஈரானுடன் எண்ணெய் வணிகம், வங்கிப் பரிவர்த்தனை, டிஜிட்டல் சொத்துக்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் தொடர்பில் இருக்கும் எந்தவொரு நாடோ அல்லது நிறுவனமோ அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் அனைத்து பொருளாதாரப் பாதைகளையும் முடக்குவதே இதன் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், இதற்குப் பதிலடியாகத் தானும் அமெரிக்கா மீது நிதி ரீதியான தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரானும் எச்சரித்துள்ளது.

ஈரான் – அமெரிக்க போர் பதற்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம், அமெரிக்கா கையாளும் இந்த மிக நுணுக்கமான யுக்தி சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவது குறித்த சர்ச்சை நிலவி வரும் நிலையில், தனிமைச் சிறையில் தங்கள் தந்தை உயிரிழக்கும் அபாயம்…

2 0 0
உலக செய்திகள்

சூடான் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய அரபு அமீரகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்!

சூடானில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது அழுத்தம் செலுத்தி அதன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு பிரித்தானிய…

74 0 0
உலக செய்திகள்

காஸா அமைதிச் சபை தோல்வி! : சர்வதேச அமைப்புகள் கவலை!!

காஸாவில் நாளாந்தம் பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துவரும் இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தத் அமெரிக்க அதிகாரிகள் தலைமையிலான காஸா அமைதி சபை (Gaza Board of Peace) தவறிவிட்டதாக,…

63 0 0
உலக செய்திகள்

ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் ஈரானிய நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக, திறந்த சந்தையில் ஒரு அமெரிக்க…

66 0 0