உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

வயல் நிலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
55 பார்வைகள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

எந்தவித அனுமதியும் இன்றி இரவு வேளைகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நெற்செய்கை மேற்கொள்ளும் வயல்கள் பாதிப்படைந்து வருவதாகவும், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸாருக்கு தெரியாமல் மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குறித்த மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தாது விட்டால் பெரும் போக நெற்செய்கையில் பெரும் பாதிப்பை விவசாயிகளாகிய நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து குறித்த பகுதியில் மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு.!

திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஞானகுளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (26) வேன் மோதி 66 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக…

23 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தொகுதி, களஞ்சியசாலை திறப்பு விழா.!

கனிம வளங்கள் நிறைந்த மன்னார் மாவட்டத்தில் கனிம எண்ணெய் மற்றும் எரிவாயு (கேஸ்) பரிசீலனைக்கு அரசு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அவ்வாறான…

52 0 0
இலங்கை செய்திகள்

தலைக்கவசம் இன்றி சிறுவனை ஏற்றி பயணித்த உந்துருளி.!

இன்று (27) ஹட்டன் உடலென் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியில் சுமார் எட்டு வயதுடைய சிறுவன் ஒருவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.…

53 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.!

கெபிதிகொல்லாவ, கோனமரியாவ விகாரைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (27) இடம்பெற்ற வீதி விபத்தில் பிறந்து 10 நாளேயான கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.…

53 0 0