உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் பலி!

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
49 பார்வைகள்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல் ஜசீரா மற்றும் ஜியோ ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, சம்பவம் இடம்பெற்றபோது PIMS மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் 16 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு குழந்தை மட்டுமே மீட்கப்பட்டதாகவும், ஏனைய 15 குழந்தைகளும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பிரிவில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி (ஏர் கண்டிஷனர்) ஒன்றின் கம்ப்ரசர் வெடித்ததையடுத்து தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், சம்பவ இடத்தில் குளிரூட்டும் பணிகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்கப் பொருட்களுக்கு கனடாவில் வரி!

அமெரிக்காவுடன் தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராகப் பதிலடித் தீர்வைகளை (Retaliatory Tariffs) கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இரண்டு நாடுகளுக்கு…

18 0 0
உலக செய்திகள்

ஓமானுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணைப் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. ஹோர்முஸ்…

62 0 0
உலக செய்திகள்

சிங்கப்பூரில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்

சிங்கப்பூரில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு குழந்தை…

36 0 0
உலக செய்திகள்

பேரான் ட்ரம்ப்பைக் கொ@லை செய்ய சதித்திட்டம் – அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்புப் பிரிவு விசாரணை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய மகன் பேரான் ட்ரம்ப்பைக் (Baron Trump) கொலை செய்வதற்கான சாத்தியமான சதித்திட்டம் குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி…

67 0 0