உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

55 பார்வைகள்

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில மகளிர் ஆணையத்திற்குத் தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

2026 ஆகஸ்ட் 3ஆம் திகதியன்று தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பெண்களைக் குறித்தும், நடிகை ஒருவரைக் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்தநிலையிலேயே குறித்த விவகாரத்தை விசாரித்த தேசிய மகளிர் ஆணையம், உதயநிதி ஸ்டாலின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மாநில மகளிர் ஆணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

75 0 0
இந்திய செய்திகள்

திருமாவளவனின் அறிவிப்பு : கண்டுகொள்ளாத விஜய்!

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து…

53 0 0
இந்திய செய்திகள்

கர்நாடகாவில் வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொ@லை – வெளியாகியது பிரேத பரிசோதனை அறிக்கை!

கர்நாடகாவில் மான் வேட்டையாடியதாகக் கூறி மூன்று தமிழர்களை வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில், அவர்கள் அருகில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக…

72 0 0
இந்திய செய்திகள்

தமிழக வெற்றிக்கழக அமைச்சர் மீது நில ஆக்கிரமிப்பு வழக்கு!

ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதல் பெரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள…

83 0 0