உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
27 வியாழன்

பேரான் ட்ரம்ப்பைக் கொ@லை செய்ய சதித்திட்டம் – அமெரிக்காவின் ரகசிய பாதுகாப்புப் பிரிவு விசாரணை!

உலக செய்திகள் 1 நாள் முன்
77 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இளைய மகன் பேரான் ட்ரம்ப்பைக் (Baron Trump) கொலை செய்வதற்கான சாத்தியமான சதித்திட்டம் குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளி தொடர்பாக அமெரிக்காவின் ரகசியப் பாதுகாப்புப் பிரிவு (Secret Service) விசாரணை நடத்தி வருகிறது.

20 வயதான பேரான் ட்ரம்ப் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரைக் கொல்வதற்காக 10 மில்லியன் டொலர் பரிசுத் தொகை (Bounty) அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானிய அரசுத் தொலைக்காட்சி மூன்று நிமிட காணொளி ஒன்றை ஒளிபரப்பியுள்ளது.

இந்தநிலையில் தங்களது பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு எதிராக வரக்கூடிய எத்தகைய அச்சுறுத்தலையும் தீவிரமாக விசாரிப்பதாக ரகசியப் பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர் நெய்த் ஹெரிங் (Nate Herring) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், செயல்பாட்டுப் பாதுகாப்பு கருதி உளவுத்துறை விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஆரம்பித்த போருக்குப் பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையே விரோதப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னரும் ட்ரம்ப்பைக் குறிவைத்து ஈரான் செயற்படுவதாக இஸ்ரேல் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

காஸா அமைதிச் சபை தோல்வி! : சர்வதேச அமைப்புகள் கவலை!!

காஸாவில் நாளாந்தம் பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துவரும் இஸ்ரேலியத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தத் அமெரிக்க அதிகாரிகள் தலைமையிலான காஸா அமைதி சபை (Gaza Board of Peace) தவறிவிட்டதாக,…

38 0 0
உலக செய்திகள்

ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதாரத் தடைகள் மற்றும் போரினால் ஈரானிய நாணயத்தின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக, திறந்த சந்தையில் ஒரு அமெரிக்க…

51 0 0
உலக செய்திகள்

பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டது அமெரிக்கா!

இங்கிலாந்தை தளமாகக் கொண்டு செயல்படும் ‘பாலஸ்தீன நடவடிக்கை’ (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க திறைசேரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,…

47 0 0
உலக செய்திகள்

நேபாள வெள்ளம் : உதவிக்கரம் நீட்டத் தயாராகும் ஐக்கிய நாடுகள் சபை

நேபாளம் மற்றும் சீனாவில் பல உயிர்களைப் காவு கொண்டதுடன், பலரைக் காணாமல் ஆக்கி, பரவலான பேரழிவையும் ஏற்படுத்தியுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு தொடர்பில் தாம் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக ஐக்கிய…

39 0 0