உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஈரான் உட்பட அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது – ட்ரம்ப்

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
60 பார்வைகள்

ஈரான் உட்பட தனக்கு எதிரான அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா தீர்க்கமான வெற்றியைப் பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது சமூக வலைத்தள பக்கமான ‘ட்ரூத் சோஷியல்’ இல் இது குறித்துப் அவர் பதிவிட்டுள்ளார்.

சர்வதேச அரங்கிலான அமெரிக்காவின் இந்த வெற்றிகரமான நிலையை மறைக்கவும், குடியரசுக் கட்சியினரின் உத்வேகத்தைச் சீர்குலைக்கவும் எதிர்க்கட்சியான டெமோக்ராட்டுகள் போலி கருத்துக்கணிப்புகளைப் பயன்படுத்தி வருவதாகச் சாடியுள்ளார்.

தீவிர இடதுசாரி டெமோக்ராட்டுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் போலி கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுப் பித்தலாட்டம் செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, அவர்களின் மனஉறுதியைக் குலைக்கும் நோக்கிலேயே இத்தகைய ‘மனஉறுதி சீர்குலைப்பு நடவடிக்கைகள்’ முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கள நிலவரப்படி உண்மையான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு மிகவும் சாதகமாகவும் அபாரமாகவும் அமைந்துள்ளன. நமது நாட்டின் எழுச்சியும் உத்வேகமும் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியாக மீள முடியாத வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஈரான் உட்பட, நமக்கு எதிரான அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் அமெரிக்கா முழுமையான வெற்றியைப் பெற்று வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இங்கிலாந்தில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி!

Athavan NewsHome உலகம் இங்கிலாந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலிHanushya P by Hanushya P 2026/08/24 in இங்கிலாந்து, உலகம்67 1A A029SHARES973VIEWSShare on FacebookShare…

38 0 0
உலக செய்திகள்

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சிரியா நீக்கம்!

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்க வெளியுறவுத் துறை நீக்கியுள்ளது. பஷார் அல்-அசாத்துக்கு பிந்தைய அரசாங்கத்திற்குத் தடைகளிலிருந்து நிவாரணம் அளிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அளித்த…

58 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் 45 கப்பல்களுக்கு ஈரான் தடை!

ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான புதிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 45 எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதுடன், அவற்றின் மீது…

24 0 0
உலக செய்திகள்

அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடி கொடுப்போம்: ஈரான் சூளுரை

ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முடக்கிவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ள விரிவுபடுத்தப்பட்ட தடைகளுக்கு எதிராகப் பதிலடி கொடுப்பதாக தெஹ்ரான் உறுதியளித்துள்ளது. அதேவேளையில், வொஷிங்டனின் அழுத்த நடவடிக்கைகளைத் தங்கள் முக்கிய…

55 0 0