உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
86 பார்வைகள்

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏற்பாட்டில் நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. இதனைக் கண்டித்தே யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் அதே நேரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச நீதியை வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடொன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் முன்னெடுப்பு.!

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

55 0 0
இலங்கை செய்திகள்

டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் கன்னங்கரகே லலித் கன்னங்கர என்றழைக்கப்படும் ‘பஸ் லலித்’…

52 0 0
இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

62 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

50 0 0