உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
56 பார்வைகள்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இந்நிகழ்வு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அரசால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபாய் பெற்றவர்களிலிருந்து இந்த 400 பேரும் பேருந்துகள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து இந்த நிகழ்வில் 450 இற்கும் மேற்பட்டோர் பங்குகொள்வர் என மண்டப ஏற்பாட்டுத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கனடா உயர்ஸ்தானிகருடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை கண்டி அமாயா ஹில்ஸ் ஹோட்டலில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.…

57 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்.!

“காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது?” எனக் கோரி, வடக்கு –…

54 0 0
இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

46 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

50 0 0