உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

இலங்கை செய்திகள் 28 நிமிடங்கள் முன்
39 பார்வைகள்

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக் கொண்டு மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

தேசிய மீலாத் பாடசாலைக் கண்காட்சி ஆரம்பம்
இன்றைய தினத்தின் முதலாவது நிகழ்ச்சியாக “தேசிய மீலாத் பாடசாலைக் கண்காட்சி” நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியின் ஆரம்ப விழாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசிங்க, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, நீர்கொழும்பு மாநகர முதல்வர் துலிப் சாமர, பிரதி மாநகர முதல்வர் முகம்மட் பசீர் ஆகியோருடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

“Welcome to Our Mosque” (எங்கள் பள்ளிவாசலுக்கு உங்களை வரவேற்கிறோம்) நல்லிணக்க நிகழ்ச்சி.
மத சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வை உறுதிப்படுத்தும் இன்றைய தினத்தின் இரண்டாவது நிகழ்ச்சியான “Welcome to Our Mosque” (எங்கள் பள்ளிவாசலுக்கு உங்களை வரவேற்கிறோம்) நிகழ்ச்சி நீர்கொழும்பு, பெரியமுல்லை பிரதான ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அழைக்கப்பட்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கே.எஸ்.என். அபேசிங்க, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

அல்-ஹிலால் வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடிக் கட்டிடம் திறந்து வைப்பு.
அதனைத் தொடர்ந்து, 42 ஆவது தேசிய மீலாதுன் நபி பிரதான அரச பெருவிழாவை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நீர்கொழும்பு அல்-ஹிலால் மத்திய மகா வித்தியாலய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர் உரிமையாக்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன உள்ளிட்ட அதிகாரிகள், பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

48 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0
இலங்கை செய்திகள்

யாழில் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து சாரதியும், நடத்துனரும்.!

இ.போ.ச. பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர். இந்தச்…

58 0 0