உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ரோபோ!

உலக செய்திகள் 40 நிமிடங்கள் முன்
43 பார்வைகள்

சீனாவில் ஹியூமனாய்டு ரோபோ போட்டியில் உசைன் போல்ட்டின் 100 மீட்டர் ஓட்ட சாதனையை தகர்த்துள்ளது ஒரு ரோபோ.

நாகரிக வளர்ச்சி பெற்ற மனிதர்கள் சக மனிதரை போட்டியாளராக கருதுவது உண்டு. இந்த போக்கை விளையாட்டு முதல் வியாபாரம் வரையில் பார்க்க முடியும். அப்படி இருக்கும் சூழலில் வரும் காலங்களில் மனிதர்கள், எந்திரங்களோடு (ரோபோ) போட்டி போடும் சூழல் உருவாகவும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

சீனாவின் பீஜிங் நகரில் ஹியூமனாய்டு ரோபோ போட்டி நேற்று தொடங்கியது. இது ரோபோக்களுக்கான ஒலிம்பிக் போட்டி என்ற அளவுகோலில் பார்க்கப்படுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் சுமார் 2, 000 ஹியூமனாய்டு ரோபோக்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்.இரண்டாது ஆண்டாக இந்த ரோபோ போட்டி நடைபெறுகிறது. ரோபாட்டிக்ஸ் துறையில் சீனா கண்டுள்ள முன்னேற்றத்தை உலகின் பார்வைக்கு கொண்டு வரும் வகையில் இது அமைந்துள்ளது. 51 விளையாட்டு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளதாக போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதில் தடகளம், டேபிள் டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளும் அடங்கும்.

கடந்த 2022-ல் குளிர்கால ஒலிம்பிக் தொடருக்காக கட்டப்பட்ட தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் ஓவலில் இந்த போட்டி நடைபெறுகிறது. சர்வதேச அளவில் சீனாவின் ஹியூமனாய்டு ரோபோக்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தகைய சூழலில் வெளிநாட்டில் வடிவமைக்கப்பட்ட புதிய ரோபோக்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்கா அடுக்கி வருகிறது. சீனாவும் அதற்கான பதிலடியை வழங்கி வருகிறது.இந்நிலையில், 2-வது ஹியூமனாய்டு ரோபோ போட்டி பீஜிங் நகரில் கோலாகலமாக தொடங்கியது. இதில் தான் உசைன் போல்ட் சாதனை முறியடிக்கப்பட்டது. கடந்த 2009-ல் 100 மீட்டர் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்திருந்தார் ஜமைக்காவின் உசைன் போல்ட். அதை இப்போது முறியடித்து 100 மீட்டர் தூரத்தை 9.39 விநாடிகளில் ரோபோ ஒன்று கடந்தது.

அதேபோல உயரம் தாண்டுதலிலும் 2.88 மீட்டர் உயரத்தை கடந்து மனிதனின் முந்தைய உலக சாதனையை ரோபோ ஒன்று முறியடித்தது. கியூபாவின் சேவியர் கடந்த 1993-ல் 2.45 மீட்டர் உயரம் தாண்டி உலக சாதனை படைத்தார். அதை இப்போது ரோபோ தகர்த்துள்ளது. இந்த இரண்டு ரோபோவும் பீஜிங்கின் எக்ஸ்-ஹியூமனாய்டு வடிவமைத்த ரோபாவாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

வளைகுடாப் பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி முற்றாக நிறுத்தப்படும் : ஈரான் எச்சரிக்கை!

தெஹ்ரானுக்கு எதிரான மிகப்பெரிய நிதிசார் தாக்குதல்களாக ஈரானின் வர்த்தகப் பங்காளிகளை இலக்காகக் கொண்ட பொருளாதாரத் தடைகளை திங்களன்று (24) அமுல்படுத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. அதேநேரம், “பொருளாதாரப்…

65 0 0
உலக செய்திகள்

தென்னாபிரிக்க குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே சுட்டுக் கொ@லை!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 38 வயதான முன்னாள் உலக குத்துச்;சண்டை செம்பியன் சொலானி டெடே, அவரது வீட்டின் முன் வைத்து, துப்பாக்கி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை…

76 0 0
உலக செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் டோக்கியோ தலைநகர் உட்பட கிழக்கு காண்டோ (Kanto) பிராந்தியத்தில் ஜப்பனிய நேரப்படி அதிகாலை 2.00 மணியளவில் மெக்னிடியூட் அளவில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

46 0 0
உலக செய்திகள்

நிலநடுக்கத்தால் அதிர்ந்த நாடு.!

ஜப்பான் – டோக்கியோ நகருக்கு அருகில் இன்று (23) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் குறைந்தது 37…

85 0 0