உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

“அநுர அரசே, மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே” – பலாலி மக்கள் 10ஆவது வாரமாகவும் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
76 பார்வைகள்

பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி மக்கள் இன்று 10ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பலாலிச் சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், “அநுர அரசே, மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறாக இருக்காதே”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் மீளக் கையளி”, “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “இராணுவப் பிடியிலிருந்து எங்கள் காணிகளை விடுவி” உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறு தமது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களை நடைமுறைப்படுத்தி, பலாலி மக்களின் பூர்வீக காணிகளை அவர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை, கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், பலாலி செபஸ்ரியார் ஆலயம் அமைந்திருந்த இடத்திலிருந்து கறுப்பு உடை அணிந்து, கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாக பலாலிச் சந்தி வரை சென்று, பலாலிச் சந்தியில் அமைந்துள்ள வீதிச் சோதனைச் சாவடிக்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி பல்வேறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், காணி விடுவிப்பைக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த், ஜனநாயகக் கட்சியின் தலைவர் வேந்தன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக பலாலி பொலிஸாரும் உதவி பொலிஸ் அத்தியட்சகரும் இணைந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஒருவரிடம் பொலிஸார் வாக்குமூலமும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், தமது பூர்வீக நிலங்களை மீட்டு, இயல்பு வாழ்க்கையை மீளப் பெற்றுக்கொள்ளும் வரையில் தமது போராட்டம் தொடரும் என பலாலி நிலமிழந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

72 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

71 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

81 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

76 0 0