உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
21 வெள்ளி

எரிபொருள் இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு!

இலங்கை செய்திகள் 34 நிமிடங்கள் முன்
53 பார்வைகள்

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் மற்றும் இறக்குமதிச் செலவுகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று (21) எழுப்பப்பட்ட வாய்மொழி வினாவுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 3,168 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2025-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இச்செலவு 1,995 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தக்காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்திற்கான எரிபொருள் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதையும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாகனத் திருட்டுக்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!

மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகங்கள் அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை குற்றவாளிகளால் திருடப்படுவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று…

3 0 0
இலங்கை செய்திகள்

விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கத் திட்டம்!

விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்குவது மற்றும் உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி…

45 0 0
இலங்கை செய்திகள்

அன்னாசிப் பழங்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய ஆயத்தம்

இலங்கையின் அன்னாசிப்பழங்களை முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொதியிடும் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்…

60 0 0