உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அமெரிக்காவின் விமானம் தாங்கிப் போர்க்கப்பல் அரபிக்கடலை சென்றடைந்தது

உலக செய்திகள் 1 மாதம் முன்
118 பார்வைகள்

அமெரிக்க விமானம் தாங்கிப் போர் கப்பலான ஐஎஸ்எஸ் ஜோர்ஜ் வோஷிங்டன், அரபிக்கடலை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய கட்டளைக் குழு இதனை தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக இந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கப்பலான ‘ஐஎஸ்எஸ் லிங்கன்’ கப்பலில் நிலவிய மோசமான சூழ்நிலைகள் குறித்த முறைப்பாடுகளை தொடர்ந்தே புதிய கப்பல் அரபிக்கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் சான் ஏசியாகோவிலிருந்து புறப்பட்ட ‘ஐஎஸ்எஸ் லிங்கன்’ கப்பல், போர்க் காலத்தில் நீண்ட நாட்கள் துறைமுகம் செல்லாமல் கடலிலேயே நின்றதன் காரணமாக,உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் பற்றாக்குறை நிலவியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், கப்பலில் உள்ள சுமார் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களின் குடும்பத்தினர், கடுமையான மன உளைச்சல் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

29 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!

அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஈரான் தனது முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளர்…

21 0 0
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்; ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசர சட்டத்தில் அமெரிக்க…

51 0 0
உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

62 0 0