உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

போலிப் பிரசாதத்தை விற்பனை செய்த Amazon நிறுவனத்துக்கு அபராதம்!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
159 பார்வைகள்


இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரசாதம் எனப் பொய்யாகக் கூறி இணையவழியில் இனிப்புகளை விற்பனை செய்தமைக்காக, பிரபல அமேசன் (Amazon) நிறுவனத்துக்கு இந்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை 1 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

‘சந்து டிரேடிங் கம்பனி’ எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘பீகாரி பிரதர்ஸ்’ என்ற பெயரில் அமேசான் தளத்தின் ஊடாக இந்த இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நெய் லட்டு, கோயா லட்டு, பூந்தி லட்டு மற்றும் பசும்பால் பேடா உள்ளிட்ட இனிப்புகளின் விபரக் குறிப்புகளில் ‘அயோத்தி ராமர் கோவில் பிரசாதம்’ என்றும், ‘ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம்’ என்றும் குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதனை உண்மை என நம்பி ஏராளமான நுகர்வோர்கள் கொள்வனவு கட்டளை செய்து பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், இவை எதுவும் உண்மையான கோவில் பிரசாதங்கள் அல்ல என்பது விசாரணைகளில் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அமேசன் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளதோடு, “நாங்கள் வெறும் இடைத்தரகர் மட்டுமே எனக் கூறிக்கொண்டு இவ்வாறான தவறான விற்பனைப் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது” எனவும் அமேசன் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு’ அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

92 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

86 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

78 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

64 0 0