உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
114 பார்வைகள்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் இடம்பெற்றபோதே இத் தகாத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுகாதாரப் பரிசோதனையின் போது குறித்த அதிகாரி தங்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து, கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அம்முறைப்பாட்டிற்கு அமைவாக இன்று புதன்கிழமை (19) பாடசாலை அதிபர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதேவேளை, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான பொதுச்சுகாதார பரிசோதகரையும் வாக்குமூலம் அளிப்பதற்காக உடனடியாகச் சமூகமளிக்குமாறு பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவசர அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் துரிதமாகச் செயற்பட்ட அதிகார சபை, கல்முனைத் தலைமையகப் பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்டச் சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவினருக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0