உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அமெரிக்க மக்களிடையே ட்ரம்ப்பின் செல்வாக்கில் பாரிய வீழ்ச்சி!

உலக செய்திகள் 1 நாள் முன்
67 பார்வைகள்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் (Donald Trump) ஆட்சிப் பணிக்கான மக்கள் ஆதரவு விகிதம் (Approval rating) அவரது பதவிக் காலத்திலேயே மிகக் குறைந்த அளவான 33 சதவீதமாகச் சரிந்துள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடைபெறும் போர் நீண்ட காலம் நீடிக்கும் என்ற கவலையே, டொனால்ட் ட்ரம்பி;ன் செல்வாக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் சரிந்து போயுள்ளமைக்கான காரணம் என்பது தெரியவந்துள்ளது.

ரொய்ட்டர்ஸ்ஃஇப்சாஸ் (Reuters/Ipsos) கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

நான்கு நாட்களால் நடைபெற்று நேற்று முடிவடைந்த இந்த கருத்துக்கணிப்பின்படி, ட்ரம்பின் செயல்பாட்டிற்கு 33வீத மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

64வீதமானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 80வீத அமெரிக்கர்கள் (87வீத ஜனநாயகக் கட்சியினர் மற்றும் 71வீத குடியரசுக் கட்சியினர்) ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் நீண்ட காலத்திற்குத் தொடரும் என நம்புகின்றனர்.

சில வாரங்களில் முடிவடையும் என 16வீதமானோர்; மட்டுமே நினைக்கின்றனர்.

ஈரான் மீதான தாக்குதல்களால் அமெரிக்கா உட்பட்ட உலகளாவிய எண்ணெய் விலையில் உயர்வும் ட்ரம்பின் சரிவுக்கான காரணமாகும்.

இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் 3 நடைபெறும் இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் தங்கள் பெரும்பான்மையைத் தக்கவைப்பது குறித்து குடியரசுக் கட்சியினருக்கு அச்சம் உருவாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0