உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் பலி!

இந்திய செய்திகள் 2 நாட்கள் முன்
61 பார்வைகள்

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 32 பேர் காயம் அடைந்தனர்.

மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வயல் வேலையில் ஈடுபட்டு விட்டு கூலி தொழிலாளிகள் சிலர் உழவு இயந்திரத்தில் சொந்த ஊரான, உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அந்த வாகனம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் பிந்த் மாவட்டத்தில் பிந்த்-குவாலியர் தேசிய நெடுஞ்சாலையில் சிம்கா கிராமம் அருகே வந்தபோது, வீதியில் கால்நடைகள் படுத்திருந்தன.

இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி அவற்றின் மீது மோதி விடாமல் இருக்க முயன்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், எதிரே வந்த லொறி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.

அத்துடன் விபத்தில் 32 பேர் வரை காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே சந்திப்பு

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெறவுள்ள தென் மண்டல மாநில முதல்வர்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்னையை வந்தடைந்தார். அதனைத்…

57 0 0
இந்திய செய்திகள்

இந்திய எல்லைகளை ஆக்கிரமிப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு!

இந்தியாவின் எல்லை மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எல்லை ஊடுருவல்கள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பதாக…

56 0 0
இந்திய செய்திகள்

தி.மு.கவின் “செயல் தலைவர்” பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திட்டம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்தகட்ட அதிகார மாற்றங்கள் குறித்தான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இந்தநிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் “செயல் தலைவர்” பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம்…

67 0 0
இந்திய செய்திகள்

நாசா வரை எதிரொலித்த தமிழக முதலமைச்சர் விஜய்யின் கை சைகை

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் பிரபல விஞ்ஞானி மருத்துவர் டோன்…

80 0 0