உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஈராக் பிரதமரின் அலுவலகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
64 பார்வைகள்

ஈராக் பிரதமரின் அலுவலகம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரதானியின் இல்லத்தைக் குறிவைத்து ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று(17.08.2026) ஈராக்கில் அதிகாலை வேளையில் இடம்பெற்ற இத் தாக்குதல்களில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என குர்திஸ்தான் பாதுகாப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“ஹதீத்-110” ரகத்தைச் சேர்ந்த இரண்டு ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலானது ஈரானிய எல்லைப் பகுதிக்குள் இருந்தே ஏவப்பட்டதாக குர்திஷ் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், ட்ரோன்கள் இலக்குகளைச் சரியாகத் தாக்கியதா என்பது குறித்த தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள பிரதமர் மஸ்ரூர் பர்ஸானி, இது சட்டவிரோதமானதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான ஒரு நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குர்திஸ்தான் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய குர்திஷ் எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஈராக் பிராந்தியம் புகலிடம் அளிப்பதாக ஈரானும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றன.

எனினும், அண்டை நாடுகளுக்கு எதிராகத் தமது நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என ஈராக்கிய குர்திஷ் அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0