உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

அமெரிக்க தூதுவர் ஜாரெட் குஷ்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவைச் சந்திக்கத் திட்டம்!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
35 பார்வைகள்

அமெரிக்க தூதுவரான ஜாரெட் குஷ்னர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவைச் சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘அமைதி சபை’ மூலம் முன்வைக்கப்பட்டுள்ள காசாவிற்கான 15 அம்ச திட்டவரைவை நடைமுறைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

காசா அமைதித் திட்டத்தில் ஹமாஸ் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் காரணியாக உருவெடுத்துள்ளதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதையே இந்நகர்வு காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த அமைதித் திட்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துதல், ஆயுதங்களைக் களைதல், இஸ்ரேலிய படைகளைத் திரும்பப்பெறுதல் மற்றும் சர்வதேச அமைதிப் படையின் உதவியுடன் பாலஸ்தீன தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய நிர்வாகத்தை அமைத்தல் ஆகிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.

எனினும், ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை காசாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் விலகாது எனக் கூறி, இந்த 15 அம்ச திட்டவரைவை பிரதமர் நெதன்யாஹு பகிரங்கமாக நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்க நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், காலத்தை கடத்துவதை விடுத்து திட்டத்தை இறுதி செய்யவே குஷ்னர் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0