உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
124 பார்வைகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களின் உடை விவகாரத்தினை பூதாகரமாக்கி வைத்தியசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் இன ரீதியான பிரச்சாரத்தினை கண்டித்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில், சிற்றூழியர்களின் சீருடை அணியாமல் மதசார்பு ஆடை அணிந்து வருகை தரும் புதிய நியமனம் பெற்ற 9 பேரின் சீருடை அவமதிப்பை எதிர்த்து இன்று (17) 6 தொழில் சங்கங்களின் ஆதரவுடன் அமைதியாக சிற்றூழியர்களின் சங்கத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது.

அரச சுற்று நிரூபத்தின் அடிப்படையில் தாங்கள் சீருடைகளை அணிவந்துவரும் நிலையில் சுகாதார அமைச்சினால் 06-08-2026 அன்று சிலர் நியமனங்களைப் பெற்று வைத்தியசாலைக்கு வந்த சுகாதார சிற்றூழியர்கள் சிலர் சீருடை தொடர்பில் ஏற்படுத்திய குழப்பங்களை சில சக்திகள் இனவாத ரீதியில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை கண்டித்தும் அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தகோரியும் இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது சீருடையின்றி வருபவர்களை கடமைக்கு அனுமதிக்காதே, சமூக வலைத்தளங்களே எங்களைக் கொல்லதே, அனைவருக்கும் பொதுவான சீரூடையை அணிய அனுமதியுங்கள், சீருடை தொடர்பான சுற்றுநிரூபத்தினை உடன் அமுல்படுத்து, வைத்தியசாலைக்கு எதிராக அவதூறுகளை பரப்பாதீர்கள் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மத ரீதியான சீருடைக்கு அனுமதி இல்லை, நிர்வாகத்திற்கு கட்டுப்படாத புதிய பெண் ஊழியர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுங்கள், சட்டம் கலாச்சார உடையை அங்கிகரிக்குமானால் இனி சீருடை என்ற விதியை அகற்றுங்கள், சகல மதத்தவருக்கும் சீருடை விலக்கை தாருங்கள் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த கோரிக்கைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் தேசிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

122 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0